முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று , ஓகே சொன்ன பிரதமர் மோடி !!

முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று , ஓகே சொன்ன பிரதமர் மோடி !!

முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று , ஓகே சொன்ன பிரதமர் மோடி !!
X

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது 1,477 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் 50 பேருக்கு இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். உரையாடலின் போது  தமிழகத்தில் உள்ள கொரோனா பாதிப்புகள், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.

அப்போது, தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, கூடுதல் ரேபிட் கருவி வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Newstm.in

Next Story
Share it