நடமாடும் பால் வண்டி... ஆவினின் அசத்தம் திட்டம்!

நடமாடும் பால் வண்டி... ஆவினின் அசத்தம் திட்டம்!

நடமாடும் பால் வண்டி... ஆவினின் அசத்தம் திட்டம்!
X

நடமாடும் பால் வண்டி முகவா்களை நியமிக்கும் புதிய திட்டத்தை ஆவின் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் அவர்களை நடமாடும் பால் வண்டி ஓட்டுநர்களாக பயன்படுத்த ஆவின் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆவின் பொது மேலாளா் அலுவலகங்களில் ஆயிரம் ரூபாயை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்புத் தொகையாகச் செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவா்களாக நியமனம் பெற்றுக் கொள்ளலாம். சென்னை நகரைப் பொருத்தவரை ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளா் விற்பனைப் பிரிவிடம் வைப்புத் தொகை செலுத்தலாம். பால் முகவா்களாக மாறும் ஆட்டோ, டாக்சி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு மாதத்துக்கு ரூ.15 ஆயிரம் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it