1. Home
  2. தமிழ்நாடு

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் ஊதியத்தில் 30% பிடிக்கப்படும் !! முதலமைச்சர் அறிவிப்பு

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் ஊதியத்தில் 30% பிடிக்கப்படும் !! முதலமைச்சர் அறிவிப்பு


கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக உள்ளது. இதில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால், அதை சரிக்கட்ட அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தில் 6 நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.

இது 5 மாதங்களுக்கு தொடரும். பிடித்தம் செய்யப்பட்ட பணம் சிறிது காலத்தில் திருப்பி தரப்படும். ஆனால் 20,000க்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு பொருந்தாது. அதே நேரம் மந்திரிகள் எம்.எல்.ஏ., க்களின் சம்பளத்திலிருந்து ஒரு வருட காலத்திற்கு 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா தொற்று கேரளாவில் தான் தொடங்கியது. ஆனால் அங்கு பெரும்பாலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாலும் , மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட ஆரம்பித்து , நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Trending News

Latest News

You May Like