காணாமல் போன காலணி

பம்பாயை சேர்ந்த கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் சாய்பாபாவின் பல லீலைகளைக் . கேள்வியுற்றார் . அவர் ஒரு சந்தேக பிராணியாக இருந்ததால், அவற்றை அவர் நம்பவில்லை. அவர் சாய்பாபாவை தாமே பரீட்சித்து பார்க்க விரும்பினார். எனவே அவரது நண்பர்களுடன் ஷீரடி வந்தார். ஜரிகை தலை பாகையுடன், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார்.

காணாமல் போன காலணி
X

பம்பாயை சேர்ந்த கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் சாய்பாபாவின் பல லீலைகளைக் . கேள்வியுற்றார் . அவர் ஒரு சந்தேக பிராணியாக இருந்ததால், அவற்றை அவர் நம்பவில்லை. அவர் சாய்பாபாவை தாமே பரீட்சித்து பார்க்க விரும்பினார். எனவே அவரது நண்பர்களுடன் ஷீரடி வந்தார். ஜரிகை தலை பாகையுடன், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார். சாய்பாபாவை தொலைவில் இருந்து கண்ட அவர் அவரிடம் விழ்ந்து பணிய எண்ணினார். அவரது புதிய காலணிகளை என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை.

காணாமல் போன காலணி

எனினும் திறந்த வெளியான ஒருமூலையில் அவைகளை வைத்து விட்டு, மசூதிக்குள் சென்று சாய்பாபாவின் தரிசனத்தை பெற்றார். சாய்பாபாவை பக்தியுடன் வணங்கி “உதி”, “பிரசாதம்” இவைகளைப் பெற்றுக் கொண்டு திரும்பினார். அவர் மூலையை அடைந்த பின் அவரின் காலணிகளை மறந்ததது நினைவுக்கு வந்தது. அவைகளுக்காக அவர் வீணாக தேடியபின், தான் இருந்த இடத்திற்கு மிகவும் மனமுடைந்து, போய் திரும்பினார். குளித்து வழிப்பட்டு, நைவேத்தியம் சமர்பித்து விட்டு, உணவுக்காக அமர்ந்தார். ஆயினும் அவ்வளவு நேரமும் காலணிகளை தவிர வேறொன்றையும் பற்றி நினைக்கவில்லை. உணவை முடித்து கொண்டபின், கை கழுவுவதற்காக, அவர் வெளியே வந்தபோது, ஒரு மராத்திய பையன் அவரை நோக்கி ஓடி வந்து,கொண்டிருந்தான். அவனது கையில் ஒரு கோல் இருந்தது. அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன.

கை கழுவ வெளியே வந்த நண்பர்களிடம் சாய்பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், “க” என்பவரின் புதலரவரான ஹரியே! ஜரிகை தலைப்பாகை காரரே,! என்று கூறி கொண்டே விதிகளில்செல்லும் படி சொல்லி இருப்பதாகவும். யாரவது இக்காலணிகளை கேட்டால், அவரது பெயர் ஹரிதானா என்றும் அவர் கவின் புத்திரர்தானா என்று , இவர் ஜரிகை தலைப்பாகை அணி பவர் என்றும், தன்னை உறுதிப்படுத்தி கொண்ட பின் இதை அவரிடம் கொடுக்கும் படி கூறியிருக்கிறார் என்று சொன்னான். இதை கேட்ட ஹரி கானோபா மகிழ்ச்சி யும் ஆச்சரியமும் அடைந்தார். பையனிடம் சென்று காலணிகள் என்னுடையது என்றார். தனது பெயர் ஹரி என்றும், தான்தான் “ க “(கானோபா வின்,) புதல்வன் என்றும், தான் அணிந்த ஜரிகை தலைப்பாகையையும் காண்பித்தார்.

காணாமல் போன காலணி

பையன் திருப்பி அடைந்து காலணிகளை கொடுத்து விட்டான். தனது ஜரிகை தலைப்பாகை வெளியில் அனைவருக்கும், தெரியுமாறு இருந்தது. ஆனால், என் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் இப்போது தான் ஷீரடி வந்திருப்பதால், சாய்பாபா எங்ஙனம், அறியக்கூடும், என மனதில் நினைத்து வியந்தார். வேறு எவ்வித குறிக்கோள் இன்றி சாய்பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே, இவர் அவர் ஷீரடி க்கு வந்தார். இந்நிகழ்ச்சியால் சாய்பாபா ஒரு மிகப்பெரிய “ஷத்புருஷர்” என்று இவர் அறிந்து கொண்டார். அவர் விரும்பியதை அறிந்து கொண்டு திருப்தியுடன், வீடு திரும்பினார்.


டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it