காணாமல் போன 7 வயது சிறுமி !! முகம் , தலை பகுதியில் காயத்துடன் புதரில் கிடந்த சிறுமி !! பாலியல் தொல்லையா ? விசாரணை

X

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30ஆம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்றுஅவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் கண்மாய் கரை புதரில் பிணமாக மீட்கப்பட்டார். இதனால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொலை செய்து இருக்கலாம் என எண்ணி போலீசார் விசாரனை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் ராஜா (வயது 26) என்பவர் காளிகோவில் அருகே அழைத்து சென்றதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில், ராஜாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ராஜாதான் அந்த சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ராஜாவை கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று அரசு மருத்துவமனைக்கு ராஜாவை அழைத்து சென்றபோது ராஜா தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய ராஜா பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it