போலி தரிசன டிக்கெட் அச்சடித்த அமைச்சரின் உறவினர் சஸ்பெண்ட்!

 | 

சென்னை பார்த்தசாரதி கோவிலில் போலி அர்ச்சனை சீட்டு அச்சடித்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜனின் உறவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான, தரிசன டிக்கெட் அச்சடித்து விநியோகம் செய்தலில் 2 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அக்கோவிலின் உதவி ஆணையர்  ஜோதிலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா  பிறப்பித்துள்ளார்.


பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஜோதிலட்சுமி, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி நடராஜனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒட்டுமொத்த அறநிலையத்துறை அதிகாரிகளும் பதட்டத்தில் உள்ளனர். இப்பிரச்சனையால் வெல்லமண்டி நடராஜன் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP