குறையாத கொரோனா பாதிப்பு.. மீண்டும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு !!

 | 

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. தற்போதும் அங்கு பாதிப்பு அதிகரித்தே காணப்படுவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு கடுமையாக போராடி வருகிறது. இதனிடையே அங்கு பக்ரீத் பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் கடைகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. அது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் நீதிமன்றம் வரை சென்றது.

அதாவது தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கும் போது கடைகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்? அது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க வழிவகுக்கும் என எதிர்ப்பு எழுந்தது. மேலும் தற்போதுவரை கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று கொரோனாவுக்கு 105 பேர் பலியானார்கள். அதனால், இந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 617 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருவதால், அதை கட்டுப்படுத்த கேரள அரசு பேரிடர் மேலாண்மை சட்டப்படி கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதாவது வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரு வாரங்கள் வாரவிடுமுறை நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மேலும் நாளை மாநிலம் முழுவதும் பிரமாண்ட கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தி ஒரே நாளில் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP