மிக மிக குறைந்த விலையில் கொரோனாவுக்கு மருந்து! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

மிக மிக குறைந்த விலையில் கொரோனாவுக்கு மருந்து! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

மிக மிக குறைந்த விலையில் கொரோனாவுக்கு மருந்து! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!
X

உலகம் முழுவதும் கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி, தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு மரணங்களைக் குறைத்திருக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்று இந்த ஆய்வுக் குழு கூறியுள்ளது. 

ஏற்கனவே சந்தையில் உள்ள, மிக மிக விலை மலிவான மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 20 மாத்திரைகளின் விலை வெறும் ரூ. 3.74 தான். இந்த மருந்து 1960களில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆர்த்திரிட்டிசிற்கும் ஆஸ்துமாவிற்கும் அளிக்கப்பட்டுவந்த ஸ்டீராய்ட் மருந்து இது. மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லுமானால், அதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது. ஆனால் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து கொண்டே இருப்பதால் இந்த மருந்து எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it