மருத்துவ மேற்படிப்பு !! OBC - க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு !! அடிப்படை உரிமையின் கீழ் வராது !! உச்சநீதிமன்றம்

மருத்துவ மேற்படிப்பு !! OBC - க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு !! அடிப்படை உரிமையின் கீழ் வராது !! உச்சநீதிமன்றம்

மருத்துவ மேற்படிப்பு !! OBC - க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு !! அடிப்படை உரிமையின் கீழ் வராது !! உச்சநீதிமன்றம்
X

இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை.

அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.

மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய , மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை.

இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைந்து வருகிறது. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் , ஒரே காரணத்திற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it