எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகளாக குறைப்பு!

எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகளாக குறைப்பு!

எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகளாக குறைப்பு!
X

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு (PG) தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2020-2021ஆம் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஏ. படிக்க பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ., படித்தவர்கள் 12ஆம் வகுப்பில் கட்டாயம் கணிதம் பாட எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it