பல ஆண்களை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசம் !! சொத்துக்கள் பறிபோகும் என்பதால் வெட்டி படுகொலை செய்த மனைவி

பல ஆண்களை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசம் !! சொத்துக்கள் பறிபோகும் என்பதால் வெட்டி படுகொலை செய்த மனைவி

பல ஆண்களை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசம் !! சொத்துக்கள் பறிபோகும் என்பதால் வெட்டி படுகொலை செய்த மனைவி
X

தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப் (45) குவைத்தில் வேலைக்கு போனவர், அசிலா என்ற பெண்ணை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சை, திருச்சியில் என 2 மனைவிகளையும் ஆளுக்கு ஒரு வீடு தந்து தங்க வைத்து யூசுப் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் பிரிட்ஜ் மீது யூசுப் காரில் சென்று கொண்டிருந்தார்..அப்போது, சில மர்ம நபர்கள் காரை மறித்து, காருக்குள் இருந்த யூசுப்பை வெளியே இழுத்து வெட்டி உள்ளனர்.

அவர்கள் யார் என்று கூட யூசப்புக்கு தெரியாது. உயிரை கையில் பிடித்து கொள்ள பிரிட்ஜ் மீது ஓடினார். ஆனாலும் கும்பல் விரட்டி விரட்டி வெட்டி கொன்று விட்டு தப்பியது. சம்பவ இடத்திலேயே யூசுப் உயிரிழந்து விட்டார். இது குறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.

அப்போது தான் சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்..அந்த 5 பேர் யார் என்பதும், எதற்காக யூசுப்பை கொல்ல வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள , அசிலாவை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.

அவர்கள் யார் என்றே தெரியாது என்று வாக்கு மூலம் தந்துவிட்டு அசிலா கிளம்பி சென்றுவிட்டார். ஆனாலும் நம் போலீசார் விடவில்லை. தனிப்பட்ட முறையில் அசிலாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

2வதாக கல்யாணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் அசிலாவை விட்டு விட்டு, திரும்பவும் யூசுப் குவைத் போய்விட்டாராம். அதாவது 2016-ம் ஆண்டு அவர் குவைத் போனதுமே, அசிலா ஆட்டம் தாங்க முடியவில்லை.

சோஷியல் மீடியாவுக்குள் நுழைந்தார். ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் பழக்கமானார்கள்.அவர்களை வீட்டுக்கே வரவழைத்து பல சமயங்களில் ஜாலியாக இருந்துள்ளார். அதுமட்டுமில்லை. யூசுப் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜரையும் வலையில் வீழ்த்தி, லாக்கரில் இருந்த 300 சவரன் நகை, கோடிக்கணக்கான சொத்துக்களை தன் பெயருக்கும் மாற்றிக் கொண்டார்.

இவ்வளவும் 2018-ல்தான் யூசுப்புக்கு தெரியவந்துள்ளது.. அசிலாவின் தவறான நடவடிக்கையை யூசுப் கண்டித்துள்ளார்.,அப்போதிருந்து தான் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. கோர்ட் வரை டைவர்ஸ் கேட்டு யூசுப் சென்றுவிட்டார்.

அப்படி டைவர்ஸ் ஆகிவிட்டால், சொத்துக்கள் பறிபோய்விடும் என்று நினைத்து தான், கணவரை போட்டு தள்ள முடிவு செய்தார்.. கூலிப்படையை ஏவிவிட்டு கொன்றுள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

தனக்கு பணம் தருவதை யூசுப் நிறுத்திவிட்டதால்தான் கூலிப்படையை ஏவி கொன்றேன் என இறுதியாக தனது வாக்குமூலத்தை தந்துள்ளார் அசிலா.. இப்போது அவர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

Newstm.in

Next Story
Share it