இன்று காலை 11.45க்கு மன்மோகன் சிங்கிற்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு - மத்திய அரசு..!
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது உடலுக்கு இறுதிசடங்கு இன்று நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:- மன்மோகன் சிங்கின் உடல் இன்று காலை 8 மணிக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு 8.30 முதல் 9.30 வரை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பிறகு காலை 9.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும். என்றார்.
இந் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்தது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல். துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து ஏழு நாள் துக்கம் அணுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மன்மோகன் சிங் உடல் நாலை காலை 11. 45 மணிக்கு முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது