மாமியார், மாமனார் கொலை.. மருமகள் கொடூரத்திற்கு கணவரும் உடந்தை..!!

மாமியார், மாமனார் கொலை.. மருமகள் கொடூரத்திற்கு கணவரும் உடந்தை..!!

மாமியார், மாமனார் கொலை.. மருமகள் கொடூரத்திற்கு கணவரும் உடந்தை..!!
X

டெல்லியில் கணவர் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரைக் கொலை செய்த மருமகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறியுள்ளன. இந்நிலையில் டெல்லியில் ஒரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மேற்கு டெல்லியைச் சேர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கவிதா (35) என்ற பெண் தனது மாமியார் மற்றும் மாமனாரைக் கொலை செய்துள்ளார். 

அவர்களது குடும்பத்தில் சொத்தை பிரிப்பது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதில் அடிக்கடி சண்டை எழுந்த நிலையில், சொத்தை அபகரிக்க மாமியாரையும், மருமகளையும் கொலை செய்ய கவிதா முடிவு செய்ததாக தெரிகிறது. 

அதன்படி வீட்டிலே மாமியார் ஓம்வதி(58), ராஜ் சிங்(61) ஆகியோரின் கழுத்தை நெறித்தும், பின்னர் கத்தியால் குத்திம் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடைபெறும் போது அப்பெண்ணின் கணவன் சதீஷ் சிங் (37), தனது பிள்ளைகளுடன் வீட்டிலில் மற்றொரு அறையில் இருந்துள்ளார்.   
 
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து சென்ற போலீஸார், வீட்டின் ஒரு படுக்கையறையிலிருந்த ராஜ்சிங் மற்றும் ஓம்வதி ஆகிய இருவரின் உடலையும் கைப்பறறினர். அத்துடன் கொலை செய்ததற்கான காரணம் என்ன ? என்று கவிதாவிடம் விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலையில் கணவர் சதீஷ் சிங்கிற்கும் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். 

newstm.in 

Next Story
Share it