சாலையில் சென்ற இளைஞர் மீது பாய்ந்த மாஞ்சா நூல் !! கழுத்தை பதம் பார்த்தது...

சாலையில் சென்ற இளைஞர் மீது பாய்ந்த மாஞ்சா நூல் !! கழுத்தை பதம் பார்த்தது...

சாலையில் சென்ற இளைஞர் மீது பாய்ந்த மாஞ்சா நூல் !! கழுத்தை பதம் பார்த்தது...
X

சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதால் , பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி, மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டத்தை விட மேலும் இரண்டு மாதங்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட மாவட்ட முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்று சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கருணாநிதி என்ற இளைஞர் மீது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி அறுத்தது.

இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அப்பகுதி மக்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவது, போன்றவற்றுக்கு செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து அம்மாவட்ட மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it