1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சயீப் அலிகானை தாக்கிய குற்றவாளி கைது..!

Q

நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த ஜன., 16ம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், அவரை ஆறு முறை கத்தியால் குத்தி தப்பி ஓடினார்.
இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை, இரு நாட்களுக்கு பின், சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகர் சயீப் அலிகானை அவரது மும்பை இல்லத்தில் கத்தியால் குத்திய நபர் மஹா., மாநிலம் தானேயில் கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் விஜய தாஸ் என அடையாளம் காணப்பட்டார். பின்னர் இவர் தனது பெயரை முகமது அலியன் என்றும் தெரிவித்தார். இதனால் இவரது பெயர் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது
இவர், மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவந்தது. ஜனவரி 16ம் தேதி மும்பை வீட்டில் சயீப் அலிகானை கத்தியால் குத்தியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக முகமது அலியனை போலீசார் பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இவர், இந்தியரா அல்லது வங்கதேசத்தை சேர்ந்தவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like