மீண்டும் முதல்வரானார் மம்தா !!

 | 

294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 292 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்து போனதால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, இடதுசாரி கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.

சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மம்தா 213 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.ஆட்சி அமைக்க 148 இடங்கள் போதுமென்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. 

இந்நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். மம்தா முதல்வராக பதிவியேற்பது இது 3 ஆவது முறையாகும். மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது தேர்தலின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

ஆனால் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஆறு மாத காலம் அவகாசம் இருப்பதால் முதல்வராக பொறுப்பேற்று, ஒரு தொகுதியில் வெற்றி பெறுவார் என தெரிகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்கும் போது மம்தா பானர்ஜி எம்எல்ஏ-வாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. முதல்வரான சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP