1. Home
  2. தமிழ்நாடு

புறநகர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்..!

1

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொது விடுமுறை என்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகை தினத்தன்று புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்படும் கால அவகாசத்தின்படி இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like