மகாராஷ்டிரா நிலை தான் நமக்கும்”… சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

 | 

பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் மகாராஷ்டிரா நிலை தான் தமிழகத்திற்கும் ஏற்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நோய் பரவல் குறைந்துள்ளதால் மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை, தனிமனித இடைவெளியையும் பின்பற்றுவதில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக 450க்கும் குறையாமல் தொற்று உறுதியாகி வருவதாக தெரிவித்தார்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதனால் முன்பு போல் மக்கள் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இல்லை என்றால் மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP