ஏரியில் மாயமான பிரபல நடிகை... படகில் தவித்த 4 வயது குழந்தை!

ஏரியில் மாயமான பிரபல நடிகை... படகில் தவித்த 4 வயது குழந்தை!

ஏரியில் மாயமான பிரபல நடிகை... படகில் தவித்த 4 வயது குழந்தை!
X

ஹாலிவுட் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் நடிகை நியா ரிவேரா. இவர் கடந்த 8ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கலிபோர்னியா ஏரியில் படகு சவாரிக்கு சென்றார்.

சில மணி நேரங்கள் கழித்து அந்தப்படகில் 4 வயது குழந்தை மட்டுமே இருந்துள்ளான். மற்றொரு படகில் வந்த சிலர் குழந்தை தனியை இருப்பதை பார்த்தனர். மேலும் படகில் பெரியவர்களுக்கான லைஃப் ஜாக்கெட் இருப்பதையும் அவர்கள் பார்த்தனர். செல்ஃபோனும் படகில் கிடந்துள்ளது.


இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படகு சவாரியின் போது நடிகை ஏரியில் விழுந்திருக்கலாம் என்று காவல்துறையினர் இரவு முழுவதும் தேடினர். ஆனால் நடிகையின் உடல் கிடைக்கவில்லை. நடிகை நியா ரிவேராவுக்கும், அவரது காதலர் ரியானுக்கும் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. அதனால் நயா விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

newstm.in

Next Story
Share it