மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவை நேரடியா பார்க்க இதை செய்யுங்க !!

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவை நேரடியா பார்க்க இதை செய்யுங்க !!

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவை நேரடியா பார்க்க இதை செய்யுங்க !!
X

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மே 3 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் , சமூக தொற்றாக மாறிவிட கூடாது என்பதற்காக பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

சித்திரை மாதத்தில் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டும். ஊரடங்கை முன்னிட்டு அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா பாரம்பரியத்துடன் உலகப் பிரசித்தி பெற்றது.

இந்த வருடம் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 25 ல் தொடங்க இருந்தது. மற்ற திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டாலும், சொக்கநாதர் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நடத்தப்பட இருக்கிறது. இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே உலகம் முழுவதும் கண்டு களிக்கும் வகையில்  www.maduraimeenaksho.org என்ற இணையதளத்தில் திருக்கல்யாணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மே 4ம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே புதிய மங்கல மங்கலநாணை மாற்றிக் கொள்ளவும் கோயில் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Newstm.in


 

Next Story
Share it