மாசி பெளர்ணமி! 12 ராசியினரும் இப்படி செஞ்சா செல்வம் செழிக்கும்?!

மாசி பெளர்ணமி! 12 ராசியினரும் எப்படி வழிபட்டால் செல்வம் செழிக்கும்?!

மாசி பெளர்ணமி! 12 ராசியினரும் இப்படி செஞ்சா செல்வம் செழிக்கும்?!
X

மாசிமகத்தில், 12 ராசியினரும் மாசி மக நாளில் விரதம் இருந்து செய்ய வேண்டிய தான, தருமங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசியினர், விரதம் இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் பணவரவு இரட்டிப்பாகும். இன்று மேஷ ராசியினர் தந்தை மற்றும் பெரியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். முன்னோர் வழிபாடு செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்தால் தடை தாமதம் நீங்கும்.

ரிஷப ராசியினர், விரதம் இருந்து சிவபெருமானுக்கு வில்வ மாலையும், அம்பிகைக்கு ரோஜா மாலையும் அணிவித்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் மன சஞ்சலம் நீங்கும்.

மிதுன ராசியினர், விரதம் இருந்து மகா விஷ்ணுவிற்கு துளசி மாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நிரந்தர செல்வம் சேரும்.

மாசி பெளர்ணமி! 12 ராசியினரும் இப்படி செஞ்சா செல்வம் செழிக்கும்?!

கடக ராசியினர், விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து அம்பிகைக்கு பால், தயிர் அபிஷேகம் செய்து வெண்பட்டு புடவை சாற்றி, பால் பாயசம் நைவேத்தியமாக படைத்தால் சகல வினைகளும் அகலும்.

சிம்ம ராசியினர், விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து பார்வதி, பரமேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து, கோதுமை பாயசம் நைவேத்தியம் செய்யுங்கள். சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை தானம் தந்து ஆசி பெற பணவரவு பன்மடங்காகும்.

கன்னி ராசியினர், விரதம் இருந்து மகா விஷ்ணுவிற்கு வஸ்திரம் சாற்றி வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் விலகி ஓடும்.

துலாம் ராசியினர், விரதம் இருந்து அம்பிகைக்கு பொட்டு தாலி அணிவித்து குங்கும அர்ச்சனை செய்வதோடு, கல்கண்டு சாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.

விருச்சிக ராசியினர், விரதம் இருந்து சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது, பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதிகரிக்கும்.

தனுசு ராசியினர், விரதம் இருந்து குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையலிட்டு வழிபட்டால், பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும்.

மகர ராசியினர், விரதம் இருந்து சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தந்து, பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி செய்ய உதவினால் கர்ம வினை நீங்கும்.

கும்ப ராசியினர், விரதம் இருந்து கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருட்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தால் மோட்சத்திற்கு வழிபிறக்கும்.

மீன ராசியினர், விரதம் இருந்து சிவனின் திருமேனிக்கு சந்தனக்காப்பு பொருத்தி குளிர்வித்தால், உங்கள் மனதில் இருக்கும் மனக்கவலை குறையும்.

newstm.in

Tags:
Next Story
Share it