வேறு சமூகத்தை சார்ந்த பெண்ணுடன் காதல் !! பெண்ணின் பெற்றோர் இளைஞரை மிரட்டல் !! இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேறு சமூகத்தை சார்ந்த பெண்ணுடன் காதல் !! பெண்ணின் பெற்றோர் இளைஞரை மிரட்டல் !! இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேறு சமூகத்தை சார்ந்த பெண்ணுடன் காதல் !! பெண்ணின் பெற்றோர் இளைஞரை மிரட்டல் !! இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
X

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ளது அம்பலகாரத் தெரு. இந்த தெருவைச் சேர்ந்த ரங்கராஜன், விஜயா தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ரங்கராஜன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

விஜயாவும் இவரது கடைசி மகன் 21 வயதான தினேஸ் ஆகியோர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் தினேஷ் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து விட்டு அண்மையில் ஆந்திராவில் உள்ள ரயில்வே துறையில் ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தினேஷ் சொந்த ஊரான சமயபுரம் வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 3 வருடமாக சமயபுரம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார் தினேஷ்.

இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிய வர , கடந்த புதன்கிழமை பெண்ணின் தாய் , பெரியம்மா, தம்பி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் என 10 க்கும் மேற்பட்ட நபர்களோடு தினேஷை வீட்டிற்கு அழைத்து வந்து மிரட்டியும் , அந்த பெண்ணை அடித்தும் பெண்ணை மறந்து விடுவதாக பத்திரத்தில் எழுதி வாங்கிவிட்டுச் சென்றதாக தினேஷின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் மனமுடைந்து திணேஷ் நேற்றிரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணின் தாய் , பெரியம்மா ,பெண்ணின் வீட்டார் என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it