1. Home
  2. தமிழ்நாடு

ஒத்தைக்கு ஒத்த மோதி பார்.? - இன்ஸ்பெக்டருக்கு சவால்விட்ட ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!!

ஒத்தைக்கு ஒத்த மோதி பார்.? - இன்ஸ்பெக்டருக்கு சவால்விட்ட ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குடிமல்லூர் சாலையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சுற்றிவந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

அதனை அந்நபர் அதனை ஏற்க மறுத்தார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், குடிமல்லூர் கிராமம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த குமரவேல்(36) என்பதும், அவர் அரக்கோணம் ரயில்வேயில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு பணிமனையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் அணியாமல் வரக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த குமரவேல், நான் ரயில்வே ஊழியர் எனவும், என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் கூறினார்.

ஒத்தைக்கு ஒத்த மோதி பார்.? - இன்ஸ்பெக்டருக்கு சவால்விட்ட ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!!

பின்னர் காவல் ஆய்வாளர் பாலு பார்த்து, நான் அப்படிதாண்டா வெளியில் சுற்றுவேன் அதை கேட்பதற்கு நீங்க யாருடா தைரியம் இருந்த உன் சட்டையை கழற்றி வைத்துவிட்டு என்னிடம் மோதி பாருங்கடா என்றும் உங்களை ஒழிச்சிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அரசு பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக குமரவேலுவை அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

ஒத்தைக்கு ஒத்த மோதி பார்.? - இன்ஸ்பெக்டருக்கு சவால்விட்ட ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!!

இதனையடுத்து 144 தடை உத்தரவை மீறி  செயல்பட்டது, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது 269, 270,  294(b),353, 506(i) IPC r/w  188 IPC  உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த வாலாஜாபேட்டை போலீசார் அவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like