1. Home
  2. தமிழ்நாடு

உள்ளூர் விடுமுறை ரத்து !!

உள்ளூர் விடுமுறை ரத்து !!


தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து தியேட்டர்களிலும் ஏப்ரல் 10 முதல் 50% இருக்கைகள் மட்டும் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50% இரவு 11 மணி வரை உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு கட்டுபாடுகள் அறிவிப்பை தொடர்ந்து வருகின்ற 12 ஆம் தேதி நடைபெற இருந்த புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை விதிகள் அமலுக்கு வருவதால் இன்றே தேர் திருவிழாவை நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி விதிகள் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக திருவிழாவை கிராம மக்கள் நடத்த உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like