1. Home
  2. தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: திமுக, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது !!

உள்ளாட்சி தேர்தல்: திமுக, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது !!


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: திமுக, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது !!

ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை திமுக மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருவோர் மாவட்ட கட்சி அலுவலங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவில், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புவோர் தலா 5 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புவோர் தலா 3 ஆயிரம் ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: திமுக, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது !!

ஏற்கெனவே விருப்பமனு அளித்திருந்தவர்கள், அதற்கான அசல் ரசீது மற்றும் நகலை சமர்ப்பித்து கட்டணமின்றி மீண்டும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like