1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! PF கணக்கில் இருந்து தொகையை எடுக்க இத்தனை விதிமுறைகளா ?

1

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் தோறும் ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஓய்வூதியத்திற்காக செலுத்தப்பட்டு வருகிறது. ஊழியர்களின் ஓய்வு காலத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தப்படும் மொத்த தொகையையும் ஊழியர்கள் தங்களின் பணிக்காலம் முடிந்து விட்டால் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிஎஃப் நிதியிலிருந்து 90% தொகையை எடுத்துக் கொள்ள முடியும்.

பணிக்காலத்தில் இருக்கும் போது ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75% பிஎஃப் தொகையும், இரண்டு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையும் பெற்றுக் கொள்ள முடியும். பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு உங்கள் அலுவலக பிஎஃப் அதிகாரியிடம் விண்ணப்பித்து, அதன் பின்னர் இ பி எஃப் ஓ அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு மட்டுமே பிஎஃப் தொகையை பெற முடியும். ஐந்து வருடங்களுக்கு முன் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு டிடிஎஸ் விதிக்கப்படுகிறது. 5 வருடங்கள் பணியாற்றிய பிறகு பி எப் நிதியிலிருந்து பணம் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு வரி விதிக்கப்படுவதில்லை.

Trending News

Latest News

You May Like