லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம்! உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம்! உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம்! உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
X

உத்தர பிரதேச மாநிலத்தில், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகில் ஜூவான்பூர் என்ற பகுதியில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹிந்துப் பெண்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது சட்டப்படி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை மனதில் கொண்டு, லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு முஸ்லீம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முஸ்லீம் அமைப்பினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it