மக்கள் மனத்தில் இடம்பிடித்த கே டிவி.. ஊரடங்கால் இந்திய அளவில் எகிறிய டிஆர்பி..!

மக்கள் மனத்தில் இடம்பிடித்த கே டிவி.. ஊரடங்கால் இந்திய அளவில் எகிறிய டிஆர்பி..!

மக்கள் மனத்தில் இடம்பிடித்த கே டிவி.. ஊரடங்கால் இந்திய அளவில் எகிறிய டிஆர்பி..!
X

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.

இதனால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் இருப்பது, செல்போன், டிவிகளை பார்த்து மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர். 

தமிழகத்தில் புதிதாக டிவி சீரியல்கள் இல்லாததால் பழைய சீரியல்களை தூசி தட்டி மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர் தொலைக்காட்சி நிறுவனங்கள். எனினும் தமிழக மக்கள் பெரும்பாலானோர் கவனம் கே டிவி பக்கம் திரும்பியுள்ளது.

இதன் காரணமாக டிஆர்பியில் கே டிவி பெரும் ஏற்றம் கண்டுள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாக சன் டிவி தான் டிஆர்பியில் இந்தியா அளவில் இரண்டாம் இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்திலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது கேடிவி தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும், இந்திய அளவில் டாப் 10 இடத்தையும் பிடித்துள்ளது.

newstm.in

Next Story
Share it