Logo

‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு

மயிலாப்பூரில் வசிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் ஆலோசனையின்படி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மிஞ்சும் அளவு நடித்து, தர்ம யுத்தம் என்ற பெயரில் மாபெரும் துராேக நாடகத்தை அரங்கேற்றினார். அதன் பின், பா.ஜ., தரப்பினரின் ஆதரவால், பழனிசாமியுடன் இணைந்து, துணை முதல்வர் பதவியை பெற்றார்
 | 

‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு


அ.தி.மு.க., பொது செயலராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த கட்சியில் இன்றளவும் குழப்பங்கள் நீடிக்கவே செய்கின்றன.

ஜெ., மறைவுக்குப் பின், ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானதும்; அவர் அந்த பதவியிலிருந்து விலகி, ஜெ.,யின் தோழி சசிகலா, முதல்வர் ஆக முயன்றதும்; அவரது சிறைவாசத்திற்குப் பின், அந்த பதவியில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்தது வரை, தொடர்ந்து பல திடீர் திருப்பங்கள் அரங்கேறின. 

அந்த திருப்பங்கள் அத்துடன் நின்றுவிடாமல், சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்., மீண்டும் எடப்பாடியுடன் இணைந்து, துணை முதல்வர் ஆனது; கட்சியின் பொது செயலர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டது வரை காட்சிகள் நீண்டன. 

அதை தொடர்ந்து நடந்த, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் நின்று போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றது; இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வழக்கு விசாரணை, அது குறித்த தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் என, அந்த கட்சியில் இன்றளவும் குழப்பம் நீடிக்கவே செய்கிறது.

இதற்கிடையே, வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான அணி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளதால், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரிசெய்ய, அந்த கட்சி மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில், தனிக் கட்சி நடத்தி வரும் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை, மீண்டும் அ.தி.மு.க.,வில் ஐக்கியப்படுத்தும் முயற்சிகள் திரைமறைவில் நடப்பதாகவே அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து,  தினகரன் துணை பொதுசெயலராக உள்ள, அ.ம.மு.க.,வில் மகளிர் அணியின் முக்கிய தலைவராக விளங்கும் சி.ஆர்.சரஸ்வதி, நம் நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், பல விஷயங்களை  பகிர்ந்து கொண்டுள்ளார். அது குறித்து, இந்த கட்டுரையில் காண்போம்.

‛நடிப்பில் சிவாஜியை மிஞ்சியவர் ஓ.பி.எஸ்.,’ : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு
அ.ம.மு.க.,வை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:

‛‛அ.தி.மு.க., எங்கள் தாய் கழகம். அதை மீட்டெடுப்பதே, அ.ம.மு.க., துணை பொதுசெயலர் தினகரனின் முக்கிய குறிக்கோள். அ.தி.மு.க.,வை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு, எங்கள் பக்கமே உள்ளது. 

தேனி மாவட்டத்தில் எங்கோ கடைக்கோடி தொண்டர்களில் ஒருவராக இருந்த, ஓ.பன்னீர் செல்வத்தை சென்னைக்கு அழைத்து வந்து, அவரை, கட்சியின் பொதுசெயலர் ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்தவர் தினகரன் தான். 

தினகரன் பங்கேற்கும் கூட்டத்தில் விழும் சால்வைகளை மடித்து வைக்கும் பணியை செய்தவர் தான் ஓ.பன்னீர் செல்வம் என்பதை அவர் மறந்துவிட்டு செயல்படுகிறார்.

 

வழக்கு ஒன்றின் தீர்ப்பு காரணமாக, அப்போது முதல்வராக இருந்த ஜெ., அந்த பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்ட போது, அந்த பொறுப்பில், ஓ.பி.எஸ்.,ஐ அமர வைக்கலாம் என பரிந்துரைத்ததே, சசிகலாவும், தினகரனும் தான். அன்றைக்கு வேறு ஒரு நபரை பரிந்துரைத்திருந்தால், ஓ.பி.எஸ்., முதல்வர் ஆகியிருக்கவே முடியாது. 

அதை மறந்து, மயிலாப்பூரில் வசிக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் ஆலோசனையின் படி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மிஞ்சும் அளவு நடித்து, தர்ம யுத்தம் என்ற பெயரில் மாபெரும் துராேக நாடகத்தை அரங்கேற்றினார். அதன் பின், பா.ஜ., தரப்பினரின் ஆதரவால், பழனிசாமியுடன் இணைந்து, துணை முதல்வர் பதவியை பெற்றார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகியபோதும் சரி, கட்சியின் பொது செயலராக சசிகாலாவை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் சரி, பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை, அவர்கள் தான் சசிகலா அவர்களிடம் அளித்தனர். அப்படிப்பட்டவர்கள் தான், இன்று துரோக அரசியல் நடத்தி வருகின்றனர்’’ என்றார். 

தொடரும்...

அடுத்த பாகம்

‛‛ மன்னிக்க முடியாத நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி’’
 

சி.ஆர்.சரஸ்வதியின் முழு  பேட்டிக்கான வீடியோவை காண இங்கே ‛கிளிக்’ செய்யவும்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP