பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்

பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்

பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்
X

பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 92 வயது நிரம்பிய இவர் முதுமை சார்ந்த நோய்களால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தவர் இன்று பிற்பகலில் புதுச்சேரியில் காலமானார்

தமிழறிஞரான மன்னர் மன்னன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்வுகள் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it