வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி எதிர்த்து போட்டியிடுக்கிறாரா குஷ்பூ ..?
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி ஆனார். உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. வயநாடு லோக்சபா தொகுதியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வரும் 25 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் பெறப்படும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28-ல் நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 30 கடைசி நாள்.
வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கேரளா - வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதிப் பட்டியலில் நடிகை குஷ்புவின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
.png)