வெளியான அவன், இவன் பேச்சு - பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பு !

வெளியான அவன், இவன் பேச்சு - பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பு !

வெளியான அவன், இவன் பேச்சு - பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பு !
X

பத்திரிக்கையாளர்களிடம் உஷாராக இருங்கள் என குஷ்பு, தங்களது சின்னத்திரை குழுவிற்கு வாட்ஸ்-அப் அனுப்பி உள்ளார். அதில் அவர் பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என பேசியது சர்ச்சையான நிலையில் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்பு ஆகியவை மார்ச் முதல் நடைபெறாமல் இருந்தன. சின்னத்திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளை 60 பேருடன் நடத்த அனுமதி கொடுத்தனர்.

இந்நிலையில் பல டிவி தொடர் படப்பிடிப்புகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

அவற்றை பத்திரிகையாளர்கள் வந்து படம் பிடித்துவிடக் கூடாது, அதனால் சர்ச்சை எழக் கூடாது என்பதற்காக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆக உள்ள குஷ்பு சங்க உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய வாட்சப் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதில், போட்டோ எடுக்கிறதுக்கு, வீடியோ எடுக்கிறதுக்கு பிரஸ்காரன் கிழிக்கிறதுக்கே உட்கார்ந்திட்டிருப்பான். பிரஸ்காரங்களுக்கு கோவிட் தவிர வேறு நியூஸே கிடையாது. நம்மளப் பத்தி போடறதுக்கு காத்திட்டிருப்பாங்க என அந்த ஆடியோவில் பேசி இருக்கிறார்.

குஷ்புவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்களும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் டுவிட்டரில் குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், பத்திரிக்கையாளர்கள் பற்றி நான் பேசியதாக வெளியான ஆடியோ குரல் திருத்தப்பட்டது. தயாரிப்பாளர்கள் குழுவில் இருந்து இதை யாரை வெளியிட்டுள்ளனர். இது போன்ற மலிவான ஆட்கள் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் நோக்கம் அல்ல. நண்பர்களுக்குள் நாங்கள் பேசும் தொனி அது. பத்திரிக்கையாளர்கள் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். என் 34 ஆண்டு சினிமா வாழ்வில் ஒருபோதும் பத்திரிக்கையாளர்களை அவமரியாதை செய்தது கிடையாது.

அந்த ஆடியோவில் பாதி மட்டுமே வெளியாகி உள்ளது. இருப்பினும் உங்கள் யாரையும் நான் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.

newstm.in 

Next Story
Share it