செல்போன் லேப்டாப் சார்ஜ் போட்டு வச்சுக்குங்க.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை நிலவரம் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை கடற்கரைக்கு வெளியே திரண்டுள்ள கடுமையான மேகங்கள் ஒருங்கிணைத்து, தீவிரமடைந்து நகருக்குள் செல்ல தயாராக உள்ளன என குறிப்பிட்டுள்ளார். இதனால் நகர் முழுவதும் அடுத்த சுற்று மழை கடுமையானதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 150 மி.மீட்டரை தாண்டி மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளாரர்.
குறிப்பாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நள்ளிரவில் இருந்து பல இடங்களில் 200 மிமீ தாண்டி மழை பதிவாகியுள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரவிருக்கும் மழை நீண்டதாகத் தெரிகிறது என்றும் நள்ளிரவில் 250 மி.மீ. தாண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இரவில் நெருங்கும் மேகங்கள் மேலும் வலுவானதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அதோடு போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கட்டாயம் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அப்பார்ட்மென்ட்டில் இருப்பவர்கள் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதமேன் எச்சரித்துள்ளார்.