இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் இணையும் கமல் – சிம்பு!?

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் சிகப்பு ரோஜாக்கள்.
அந்தப்படத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்திருந்தனர். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வெளியாகி மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.தற்போது அதில் கமலும் சிம்புவும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் தந்தையுடன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்த மனோஜ், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் மனோஜ் ஈடுபட்டுள்ளார்.
இதேபோன்ற கதையம்சம் உள்ள மன்மதன் படத்தில் நடித்த அனுபவம் சிம்புவுக்கு இருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் அவருக்கும் கமலுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரங்களை மனோஜ் உருவாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் கமலும், சிம்புவும் முதன்முதலில் இணையும் படமாக சிகப்பு ரோஜாக்கள் 2 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in