சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் : 2 வரியில் அழகாக வாழ்த்து சொன்ன கமல்..!
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்.
அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க! என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.
அந்த இரண்டு வரிகளில் இருந்த விஷயம் அனைவரின் மனதையும் நிறைய வைத்துவிட்டது.நண்பனுக்கு தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி கிடைக்க வேண்டும். நலமாக இருக்க வேண்டும்,நீடுழி வாழ வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அழகாக வாழ்த்தியிருக்கிறார் கமல். பெரிய கட்டுரை தேவையில்லை மனதார வாழ்த்த இரண்டு வரிகள் போதும் என நிரூபித்துவிட்டார் கமல்.
அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2024
மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!