கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை!

 | 

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என்று நிர்வாகிகளை கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கடுமையான தோல்வியை சந்தித்தது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனே தோல்வியை தழுவியுள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்கள் உடன், கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். வாக்கு சதவீதம் குறைந்தது, நிர்வாகிகளின் தேர்தல் பணி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


அப்போது பேசிய கமல்ஹாசன், கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் வரும் எனவும், அது கடுமையாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்சிக்கு புத்துணர்ச்சியளிக்கும் புதிய முடிவுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP