வங்கதேசத்தில் பிரதமர் மோடி உபயமாக வழங்கிய காளி கீரிடம் மாயம்..!
வங்கதேசம் சத்கீரா ஷியாம் நகரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜெஷோரேஸ்வரி கோவில். 2021ம் ஆண்டு பிரதமர் மோடி வங்கதேசம் சென்றபோது, இந்த காளி கோயிலுக்கு கிரீடத்தை பரிசளித்திருந்தார். தங்க முலாம் பூசப்பட்ட அந்த வெள்ளி கிரீடம் காளி தேவிக்கு சூட்டப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் கோவில் பூசாரி பூஜையை முடித்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பி உள்ளார். மீண்டும் மாலை கோவிலுக்கு வந்து பார்த்த போது, கிரீடம் திருட்டு போயி உள்ளது தெரியவந்துள்ளது. சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.