"இரவில் உதவிக்கு வர தயார் என்றார்" : பிரபல தமிழ் நடிகர் மீது கபாலி நடிகை குற்றச்சாட்டு!

 | 

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பின் போது கடுமையான முதுகுவலி ஏற்பட்டது என்றும், எப்படியோ சமாளித்து அறைக்கு சென்ற போது லிஃப்ட்டில் வந்த அந்த பிரபல நடிகர், இரவில் எந்த உதவி வேண்டுமானாலும் கூறுங்கள் வருகிறேன் என்று சொன்னதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். 


மேலும் முதுகில் கை வைத்து தேய்த்துவிடவா என்று அவர் கேட்டார் என்றும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் யார் என்று கூறவில்லை. தமிழில் சில படங்கள் மட்டுமே இவர் நடித்துள்ளதால் ரசிகர்கள் அந்த நடிகர் யார் என்று தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP