#JUST IN : தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு..!
சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. கடந்த 3 நாட்களாக சரிந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.55,680 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,960க்கு வர்த்தகமாகிறது.
அதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சம்பெற்றே வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.0.50 அதிகரித்து ரூ.98க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.