#JUST IN : கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது..!

கேரளா மாநிலம் நீலாம்பூர் ரோடு-சோரனூர் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தோறும் நீலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு சோரனூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் பாலக்காட்டில் உள்ள வல்லப்புழா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று ரயில் தண்டவாளத்தில் மாடுகள் வந்தது. இதை பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்தும் ரயில் மாடுகள் மீது மோதியது. பின்னர், தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் அலறியபடி ரயிலில் இருந்து வேகமாக இறங்கினர்.
நல்வாய்ப்பாக உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. இருப்பினும், மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.