1. Home
  2. தமிழ்நாடு

பிரதமரை அவதூராக பேசியதாக பத்திரிகையாளர் மீது வழக்கு !! கைது செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..

பிரதமரை அவதூராக பேசியதாக பத்திரிகையாளர் மீது வழக்கு !! கைது செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..

பிரதமர் மோடியை அவதூராக பேசியதாக மூத்த பத்திரிக்கையாளர் வினோத் துவா மீது பாஜகவைச் சேர்ந்த அஜய் ஷ்யாம், சிம்லா போலீஸில் புகார் அளித்திருந்தார். பயங்கரவாத தாக்குதல்களையும் ,

பிரதமரை அவதூராக பேசியதாக பத்திரிகையாளர் மீது வழக்கு !! கைது செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..

மரணங்களையும் பிரதமர் மோடி , வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்துவதாகவும் , இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் வினோத் துவா அவதூறாக பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக இமாச்சல பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், பத்திரிக்கையாளர் வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய வினோத் துவா விடுத்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த காவல்துறைக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like