சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு..!!

 | 

கொரோனா ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ள போதிலும், ஆன்லைனில் தங்கம், வெள்ளி நகைகளை முன்பதிவு செய்து சிலர் வாங்கி வருகின்றனர். இதனால் அதற்கான விலையும் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.144 விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,336-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, ரூ.4,542-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் உயர்ந்து ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP