ஜெயலலிதா மரணம் !! ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் !! ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் !! ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
X

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி , அது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு செப்.,25ம் தேதி அமைத்தது.

மேலும், 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணையில் இருப்பதால் , ஆறுமுகசாமியின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர், வழக்கு விசாரணைகளுக்கு பிறகு மீண்டும் விசாரணையை ஆணையம் தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 7வது முறையாக 4 மாத காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் , ஜுன் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை 8வது முறையாக மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடிதம் மூலமாக ஆறுமுகசாமி ஆணையம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, மேலும் 4 மாதமாக கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு வழங்கியது.

Newstm.in

Next Story
Share it