ஜெய் ஶ்ரீராம் கூற சொல்லி கொடுமை !! வாரணாசியில் நேர்ந்த கொடூரம் !!

ஜெய் ஶ்ரீராம் கூற சொல்லி கொடுமை !! வாரணாசியில் நேர்ந்த கொடூரம் !!

ஜெய் ஶ்ரீராம் கூற சொல்லி கொடுமை !! வாரணாசியில் நேர்ந்த கொடூரம் !!
X

இந்தியாவுக்கு எதிராக நேபாள அரசு பல்வேறு சர்ச்சைக் கருத்தை கூறி வருகிறது. இந்தியாவில் உள்ள அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை, அவர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது, ராமர் இந்தியர் இல்லை, நேபாளி என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவித்தது இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நேபாள பிரதமருக்கு எதிராக பல இந்து அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வாரணாசிக்கு வந்த நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவரின் தலையில் மொட்டை போட்டு, ஜெய்ஶ்ரீராம் சொல்லச் சொல்லி, நேபாள பிரதமருக்கு எதிராக கோஷம் போடச் சொல்லி அதை வீடியோவாகவும் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாரணாசி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான நேபாளத் தூதர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

நேபாள மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அப்போது யோகி ஆதித்யநாத் உறுதி அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. நேபாளம் ஶ்ரீராமருக்கு எதிராக இல்லை, அவரை தங்கள் நாட்டவர் என்று சொந்தம் கொண்டாடுகிறது. அப்படி இருக்கும்போது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் நேபாள இளைஞருக்கு நேர்ந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

Newstm.in

Next Story
Share it