'அது உண்மையில்லை...' அசுரன் பட நாயகி மறுப்பு!

'அது உண்மையில்லை...' அசுரன் பட நாயகி மறுப்பு!

அது உண்மையில்லை... அசுரன் பட நாயகி மறுப்பு!
X

மலையாள திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான மஞ்சு வாரியார் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தான் நடத்த முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரையை பதித்தார் அவர். அதனைத் தொடர்ந்து மலையாளப்படங்களில் நடித்துவருகிறார் மஞ்சு. இந்நிலையில் ஜோபின் டி சாக்கோ இயக்கும், தி பிரைஸ்ட் என்ற மலையாள படத்தில், முதன் முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார், மஞ்சுவாரியர்.

ஆனால் படத்தில் இருந்து மஞ்சு விலகியதாக ஒரு தகவல்பரவியது. ஆனால் அதற்கு மஞ்சு வாரியர் மறுப்பு தெரிவித்துள்ளார். அது உண்மையல்ல என்றும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஏன் இப்படி தவறான தகவல் பரவுகிறது என புரியவில்லை என்று கூறியுள்ளார். 

newstm.in

Next Story
Share it