பேரின்பம் உண்டாக மறக்காம இதை செய்தாலே போதும்!

பேரின்பம் உண்டாக மறக்காம இதை செய்தாலே போதும்!

பேரின்பம் உண்டாக மறக்காம இதை செய்தாலே போதும்!
X

பாடல் 19

அபிராமி அந்தாதி

வெளிநின்ற நின் திருமேனியை பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

பொருள்

ஒளி நிறைந்து நிற்கும் தவகோணத்தில் தங்கும் அபிராமியே ! அடியேன் காணும்படி நின்ற நிந்தன் திருமேனியை புறத்தே கண்டு கண்களிலும் அகத்தே கண்டு நெஞ்சத்திலும் நிலை பெற்றதால் உண்டான இன்ப வெள்ளத்துக்கு கரை காண முடியவில்லை. அடியேனது உள்ளம் தெளிவடைந்து ஞானம் பிரகாசிப்பதும் இந்த எளியேன் பால் நீ கொண்ட கருணையே அன்றி வேறில்லை தாயே அபிராமியே!

அம்பிகையின் பேரருளை கண்டு வியந்து போற்றி அனுதினமும் பாடி வர உள்ளத்தில் ஆனந்தஅதிசயம் நிகழும் என்பது நம்பிக்கை.

Tags:
Next Story
Share it