யானைகள் வழித்தடத்தை ஈஷா ஆக்கிரமிக்கவில்லை” : தமிழக அரசு!!

 | 

ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த பதில்களின்படி இது தெரியவந்துள்ளது.  கோவை வெள்ளங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசு தரப்பில், ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள இடத்தில் எவ்வித யானைகள் வழித்தடமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

isha

பல ஆண்டுகளாக யோகா மையம் பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் அமைந்துள்ளது என்றும், அதன் கட்டுமானங்களை இப்பகுதியில் கட்டுவதற்கு முன், மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெறவில்லை என்றும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமிகழ அரசு சார்பில் ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP