1. Home
  2. தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை உயர்வுக்கு இதுதான் காரணமா..?

ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை உயர்வுக்கு இதுதான் காரணமா..?

டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைக்க நடைமேடை டிக்கெட்டின் விலையை ரூ.30 ஆக உயர்த்தி வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர நடைமேடை டிக்கெட் பெற்று உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் சேவை தொடங்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே கூறியது,

டெல்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை டிக்கெட் கொடுக்கும் பணி தொடங்கப்படும். மேலும், தேவையற்ற கூட்டத்தை குறைக்கும் விதமாக நடைமேடை டிக்கெட்டின் விலை ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like