ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ? - முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை !

ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ? - முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை !

ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ? - முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை !
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (28.06.20) மருத்துவ நிபுணர் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் போடப்பட்ட, ஐந்தாம் கட்ட ஊரடங்கு 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு நிறைவுபெறும் முன்னரும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப முடிவுகளை அறிவித்து வருகிறார்.

தற்போது தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை , வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி கொண்டிருக்கிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்  குறித்து அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்வது, தொற்றுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளார்.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் மருத்துவர்கள் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்க உள்ளனர். இதனை அடுத்து ஊரடங்கு தொடர்பான முக்கிய முடிவினை முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

Next Story
Share it