அதுக்குள்ளயா ? இணையத்தில் வெளியானது லியோ; படக்குழு அதிர்ச்சி..!

லியோ திரைப்படம் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் திரையரங்கு முன்பு மேள தாளங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்து விஜயின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆடி பாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இதனிடையே லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட லியோ திரைப்படம் பல்வேறு இடையூறுகளை கடந்து அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் திரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இணையத்தில் வேகமாக பரவி வருவது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.